விகிதங்கள் சரிபார்த்தது 22 அக்டோபர் 2026
முகப்பு / TNEB மின் கட்டணம் கணக்கீடு · Read in English
TNEB மின் கட்டணம் கணக்கீடு
உங்கள் இரண்டு மாத பில்லில் உள்ள யூனிட்டை உள்ளிடுங்கள். ஒவ்வொரு வரியும், 200 இலவச யூனிட்டும், 500 யூனிட் எல்லைக்கு எவ்வளவு அருகில் இருக்கிறீர்கள் என்பதும் உடனே தெரியும்.
உங்கள் TNEB பில்லில் இது "Consumption" என்ற வரி. TNEB இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பில் போடுகிறது.
TNEB: இரண்டு மாதங்களில் 450 யூனிட்
₹1,255
இந்தப் பயன்பாட்டுக்கு நீங்கள் செலுத்த வேண்டியது. பழைய நிலுவை அல்லது சரிசெய்தல்கள் இதில் இல்லை.
- 1 முதல் 200 யூனிட் வரை₹0தமிழ்நாடு அரசுத் திட்டத்தில் இலவசம்.
- 201 முதல் 400 யூனிட் வரை₹940200 யூனிட், ஒவ்வொன்றும் ₹4.70.
- 401 முதல் 450 யூனிட் வரை₹31550 யூனிட், ஒவ்வொன்றும் ₹6.30.
- நிலைக் கட்டணம்₹0தமிழ்நாட்டில் வீடுகளுக்கு நிலைக் கட்டணம் இல்லை (TNERC T.O. 6 of 2025).
500 யூனிட்டுக்கு இன்னும் 50 யூனிட் மட்டுமே500-ஐத் தாண்டினால் இந்த பில் ₹478.40 அதிகரிக்கும், ஏனெனில் 500 யூனிட்டுக்கு மேல் முதல் 100 யூனிட் மட்டுமே இலவசம்.
உங்கள் யூனிட் மற்றும் மொத்தத் தொகை மட்டுமே அனுப்பப்படும்.
கட்டண விகிதங்கள்: TNERC Order No. 4 of 2026, 27 Apr 2026, TNERC Order No. 5 of 2026, 26 May 2026. கடைசியாகச் சரிபார்த்தது 22 அக்டோபர் 2026.
இரண்டு மாதங்களில் 500 யூனிட் அல்லது அதற்குக் குறைவாகப் பயன்படுத்தினால் முதல் 200 யூனிட் இலவசம். 500-ஐ ஒரு யூனிட் தாண்டினாலும் பில் ₹478.40 கூடும். வீடுகளுக்கு நிலைக் கட்டணம் இல்லை.
வீடுகளுக்கான TNEB கட்டண விகிதம் 2026
வீட்டு (LT-IA) இணைப்புகளுக்கு, இரண்டு மாத பில்லில் ஒரு யூனிட்டுக்கான விகிதம் இது. முழு விகிதத்தை TNERC நிர்ணயிக்கிறது; அதில் ஒரு பகுதியைத் தமிழ்நாடு அரசு செலுத்துகிறது (அரசு); மீதியை நீங்கள் செலுத்துகிறீர்கள் (நீங்கள்). இரண்டு மாத மொத்த யூனிட்டைப் பொறுத்து எந்த அட்டவணை என்பது முடிவாகும்.
| யூனிட் | TNERC | அரசு | நீங்கள் |
|---|---|---|---|
| 1 முதல் 200 | ₹4.95 | ₹4.95 | இலவசம் |
| 201 முதல் 400 | ₹4.95 | ₹0.25 | ₹4.70 |
| 401 முதல் 500 | ₹6.65 | ₹0.35 | ₹6.30 |
| யூனிட் | TNERC | அரசு | நீங்கள் |
|---|---|---|---|
| 1 முதல் 100 | ₹4.95 | ₹4.95 | இலவசம் |
| 101 முதல் 400 | ₹4.95 | ₹0.25 | ₹4.70 |
| 401 முதல் 500 | ₹6.65 | ₹0.35 | ₹6.30 |
| 501 முதல் 600 | ₹8.80 | ₹0.40 | ₹8.40 |
| 601 முதல் 800 | ₹9.95 | ₹0.50 | ₹9.45 |
| 801 முதல் 1,000 | ₹11.05 | ₹0.55 | ₹10.50 |
| 1,000-க்கு மேல் | ₹12.15 | ₹0.60 | ₹11.55 |
TNERC Order No. 4 of 2026, 27 Apr 2026, பக்கங்கள் 7 முதல் 9; TNERC Order No. 5 of 2026, 26 May 2026. வீடுகளுக்கு நிலைக் கட்டணம் இல்லை: TNERC Tariff Order No. 6 of 2025, 30 Jun 2025, பக்கம் 34.
மின்சார பில் எப்படிக் கணக்கிடுவது
- யூனிட்டைக் கண்டுபிடியுங்கள். தற்போதைய மீட்டர் ரீடிங்கில் இருந்து கடந்த பில்லின் ரீடிங்கைக் கழியுங்கள். பில்லில் இது "Consumption" என்ற வரி.
- 500-க்குக் கீழா, மேலா என்று பாருங்கள். 500 வரை முதல் 200 யூனிட் இலவசம்; 500-க்கு மேல் முதல் 100 மட்டுமே.
- ஒவ்வொரு ஸ்லாபையும் தனியாகக் கணக்கிடுங்கள். ஒரு ஸ்லாபில் உள்ள யூனிட்டுக்கு மட்டுமே அதன் விகிதம். 450 யூனிட்: 200 இலவசம், 200 யூனிட் × ₹4.70 = ₹940, 50 யூனிட் × ₹6.30 = ₹315. மொத்தம் ₹1,255.
100 முதல் 1,000 யூனிட் வரை TNEB பில்
மேலே உள்ள விகிதங்களில், ஒரு வீட்டின் இரண்டு மாத பில்லுக்குக் கணக்கிட்டது.
| யூனிட் | கணக்கு | பில் |
|---|---|---|
| 100 | 100 இலவசம் | ₹0 |
| 200 | 200 இலவசம் | ₹0 |
| 300 | 200 இலவசம், 100 யூனிட் ₹4.70 | ₹470 |
| 400 | 200 இலவசம், 200 யூனிட் ₹4.70 | ₹940 |
| 450 | 200 இலவசம், 200 யூனிட் ₹4.70, 50 யூனிட் ₹6.30 | ₹1,255 |
| 500 | 200 இலவசம், 200 யூனிட் ₹4.70, 100 யூனிட் ₹6.30 | ₹1,570 |
| 501 | 100 இலவசம், 300 யூனிட் ₹4.70, 100 யூனிட் ₹6.30, 1 யூனிட் ₹8.40 | ₹2,048.40 |
| 600 | 100 இலவசம், 300 யூனிட் ₹4.70, 100 யூனிட் ₹6.30, 100 யூனிட் ₹8.40 | ₹2,880 |
| 800 | 100 இலவசம், 300 யூனிட் ₹4.70, 100 யூனிட் ₹6.30, 100 யூனிட் ₹8.40, 200 யூனிட் ₹9.45 | ₹4,770 |
| 1,000 | 100 இலவசம், 300 யூனிட் ₹4.70, 100 யூனிட் ₹6.30, 100 யூனிட் ₹8.40, 200 யூனிட் ₹9.45, 200 யூனிட் ₹10.50 | ₹6,870 |
300 யூனிட் மின்சாரத்துக்கு எவ்வளவு?
₹470. 200 யூனிட் இலவசம், 100 யூனிட் ஒவ்வொன்றும் ₹4.70.
500 யூனிட்டுக்கு TNEB பில் எவ்வளவு?
₹1,570. 200 இலவசம், 200 யூனிட் ₹4.70, 100 யூனிட் ₹6.30.
1,000 யூனிட்டுக்கு?
₹6,870. 500-க்கு மேல் 100 யூனிட் மட்டுமே இலவசம்; 801 முதல் 1,000 வரை ஒவ்வொன்றும் ₹10.50.
500 யூனிட் எல்லை
இரண்டு மாதங்களில் 500 யூனிட் அல்லது குறைவு என்றால் முதல் 200 யூனிட் இலவசம். ஒரு யூனிட் தாண்டினாலும் 100 மட்டுமே இலவசம்; 101 முதல் 200 வரை ஒவ்வொன்றுக்கும் ₹4.70 செலுத்த வேண்டும்.
கடந்த பில் 500-க்கு அருகில் இருந்தால், மீட்டரைக் கவனியுங்கள்: இன்றைய ரீடிங்கில் இருந்து கடந்த பில்லின் ரீடிங்கைக் கழியுங்கள். 1,000 வாட் சாதனம் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால் இரண்டு மாதத்தில் சுமார் 60 யூனிட் ஆகும். சாதனத்தின் வாட் அளவு அதன் லேபிளில் இருக்கும்.
200 யூனிட் இலவச மின்சாரம்: யாருக்கு, எவ்வளவு மிச்சம்
10 மே 2026 முதல், இரண்டு மாதங்களில் 500 யூனிட் அல்லது குறைவாகப் பயன்படுத்தும் ஒவ்வொரு வீட்டு இணைப்புக்கும் முதல் 200 யூனிட் இலவசம்; முன்பு 100 (அரசாணை G.O.(Ms) No. 50, 10 மே 2026; மானியத்துக்கு ஒப்புதல்: TNERC Order No. 5 of 2026, 26 May 2026). 500-க்கு மேல் முதல் 100 யூனிட் மட்டுமே இலவசம். இதற்கு முன் 101 முதல் 200 வரை ஒரு யூனிட் ₹2.35.
| யூனிட் | 10 மே 2026-க்கு முன் | இப்போது |
|---|---|---|
| 150 | ₹117.50 | ₹0 |
| 220 | ₹329 | ₹94 |
| 300 | ₹705 | ₹470 |
| 450 | ₹1,490 | ₹1,255 |
ஒரு வீட்டுக்கு அதிகபட்ச மிச்சம் ஒரு பில்லுக்கு ₹235, 200 முதல் 500 யூனிட் வரை. 500-க்கு மேல் எதுவும் மாறவில்லை.
உங்கள் TNEB பில்லை எப்படிப் படிப்பது
பில்லில் ஆங்கிலத்தில் அச்சிடப்படும் வரிகள் இவை (நாங்கள் சரிபார்த்த 2024 வீட்டு TNEB பில்லின்படி). புதிய பில்களில் சொற்கள் சற்று மாறலாம்.
மக்கள் கேட்கும் கேள்விகள்
மின்சார பில் எப்படி கணக்கிடுவது?
தற்போதைய மீட்டர் ரீடிங்கில் இருந்து முந்தைய பில்லின் ரீடிங்கைக் கழித்தால் இரண்டு மாதங்களில் பயன்படுத்திய யூனிட் கிடைக்கும். ஒவ்வொரு யூனிட் பிரிவுக்கும் (ஸ்லாப்) அதன் விகிதம் மட்டுமே. 500 யூனிட் வரை: முதல் 200 இலவசம், 201 முதல் 400 வரை ஒவ்வொன்றும் ₹4.70, 401 முதல் 500 வரை ஒவ்வொன்றும் ₹6.30. உதாரணம்: 450 யூனிட் = ₹1,255.
200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்குக் கிடைக்கும்?
இரண்டு மாதங்களில் 500 யூனிட் அல்லது அதற்குக் குறைவாகப் பயன்படுத்தும் ஒவ்வொரு வீட்டு (LT-IA) மின் இணைப்புக்கும், 10 மே 2026 முதல் (அரசாணை G.O.(Ms) No. 50, 10 மே 2026). 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் முதல் 100 யூனிட் மட்டுமே இலவசம். TNERC ஆணை 5/2026 இதற்கு விண்ணப்பம் எதுவும் குறிப்பிடவில்லை; இரண்டு மாத நுகர்வை வைத்தே தானாகக் கணக்கிடப்படுகிறது.
500 யூனிட்டைத் தாண்டினால் பில் ஏன் இவ்வளவு கூடுகிறது?
501 யூனிட்டில் இலவச யூனிட் 200-லிருந்து 100 ஆகக் குறைகிறது. அதனால் 101 முதல் 200 வரையிலான 100 யூனிட்டுக்கு ஒவ்வொன்றும் ₹4.70 செலுத்த வேண்டும்: அது மட்டுமே ₹470. 501-வது யூனிட் ₹8.40. எனவே 500 யூனிட்டில் ₹1,570, 501 யூனிட்டில் ₹2,048.40. பில் அதிகமாக வர மற்ற காரணங்களும் புகார் செய்யும் வழியும் (ஆங்கிலத்தில்): Why is my TNEB bill so high?
தமிழ்நாட்டில் 1 யூனிட் மின்சாரம் எவ்வளவு?
நீங்கள் எந்த ஸ்லாபில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டுக்கு முதல் 200 யூனிட் இலவசம், அடுத்த 200 ஒவ்வொன்றும் ₹4.70, 401 முதல் 500 வரை ₹6.30. 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட் ₹11.55. ஒரு யூனிட் என்பது ஒரு கிலோவாட் மணி (kWh).
மின் கட்டணம் பார்ப்பது எப்படி?
TNPDCL-இன் Bill Status பக்கத்தில் உங்கள் சர்வீஸ் இணைப்பு எண்ணையும் பதிவு செய்த மொபைல் எண்ணையும் உள்ளிட்டால் உங்கள் பில் தெரியும். அதில் உள்ள யூனிட்டை மேலே உள்ள கணக்கீட்டில் உள்ளிட்டு, ஒவ்வொரு வரியும் எப்படி வருகிறது என்று பார்க்கலாம்.
இரண்டு மாத யூனிட்டா, ஒரு மாத யூனிட்டா உள்ளிட வேண்டும்?
இரண்டு மாத யூனிட். TNEB இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பில் போடுகிறது; ஸ்லாப்களும் இரண்டு மாதத்துக்கே. ஒரு மாத யூனிட் மட்டும் தெரிந்தால், மதிப்பீட்டுக்கு இரட்டிப்பாக்கி உள்ளிடுங்கள்.
நிலைக் கட்டணம் அல்லது மின் வரி உண்டா?
TNERC கட்டண ஆணை 6/2025-இன்படி வீடுகளுக்கு நிலைக் கட்டணம் இல்லை. நாங்கள் சரிபார்த்த 2024 வீட்டு TNEB பில்லில் மின் வரி ₹0. உங்கள் உண்மையான பில்லில் பழைய நிலுவை, தாமதக் கட்டணம் அல்லது சரிசெய்தல்கள் இருக்கலாம்; அவை இந்தக் கணக்கீட்டுக்குத் தெரியாது.
TNEB, TANGEDCO, TNPDCL: யார் பில் அனுப்புகிறார்கள்?
மக்கள் இன்னும் TNEB என்றே சொல்கிறார்கள். இப்போது பில் அனுப்புவது TNPDCL (தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்); பழைய பில்களில் TANGEDCO என்று இருக்கும். கட்டண விகிதங்களை நிர்ணயிப்பது TNERC (தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்).
ஆதாரங்கள்
- TNERC Order No. 4 of 2026, 27 Apr 2026. 2026-27 மானியமும் வீடுகள் செலுத்தும் விகிதமும் (பக்கங்கள் 7 முதல் 9).
- TNERC Order No. 5 of 2026, 26 May 2026. 500 யூனிட் வரை 200 இலவச யூனிட்டுக்கான மானியம், அரசாணை G.O.(Ms) No. 50 (10 மே 2026) படி.
- TNERC Tariff Order No. 6 of 2025, 30 Jun 2025. 1 ஜூலை 2025 முதல் கட்டண விகிதங்கள்; வீடுகளுக்கு நிலைக் கட்டணம் இல்லை (பக்கம் 34).
- TNERC tariff orders list, சரிபார்த்தது 22 அக்டோபர் 2026.
தவறு கண்டால் எங்களுக்குத் தெரிவியுங்கள் (ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதலாம்: [email protected]).